செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (19:32 IST)

சினிமாவில் இருந்து விலகிவிட்டாரா நாசர்? மனைவி கமீலா விளக்கம்!

nassar
நடிகர் நாசர் உடல்நலக்குறைவு காரணமாக சினிமாவில் இருந்து விலகி விட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவிய நிலையில் இதுகுறித்து அவருடைய மனைவி கமீலா நாசர் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
 
சர் அவர்களுக்கு உணவு மூச்சுக்காற்று எல்லாமே சினிமாதான் என்றும் அவர் சினிமாவில் இருந்து விலகுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறினார்
 
 மேலும் இதுபோன்ற வதந்திகள் எப்படி பரவுகிறது என்றே தெரியவில்லை என்றும் தயவுசெய்து இனியாவது இந்த வதந்திகளை பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார் 
 
நடிகர் நாசர் இப்போதும் பல திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகராக இருக்கும் நிலையில் திடீரென அவர் உடல்நலக்குறைவு காரணமாக நடிப்பதை நிறுத்தி விட்டதாக வதந்தி பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.