திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (20:47 IST)

சொந்த பேனரில் நடிக்க மாட்டேன் - நானி திட்டவட்டம்

‘சொந்த பேனரில் நடிக்க மாட்டேன்’ என தெலுங்கு நடிகர் நானி தெரிவித்துள்ளார்.
‘வெப்பம்’, ‘நான் ஈ’, ‘ஆஹா கல்யாணம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகர் நானி. சாய் பல்லவியுடன் இவர் நடித்த ‘எம்சிஏ’ தெலுங்குப் படம், கடந்த டிசம்பர் மாதம் ரிலீஸானது.
 
நடிப்பது மட்டுமின்றி, படங்களைத் தயாரிக்கவும் செய்துள்ளார் நானி. 2013ஆம் ஆண்டு ரிலீஸான ‘டி பார் டோபிடி’ படத்தைத் தயாரித்த நானி, தற்போது ‘ஆவ்’ என்ற தெலுங்குப் படத்தைத் தயாரித்துள்ளார். காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட நானி, “நான் ஒருபோதும் என்னுடைய சொந்த பேனரில் நடிக்க மாட்டேன். திறமையுள்ள இளைஞர்களுக்கு என்னுடைய பேனரில் வாய்ப்பு அளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.