செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (09:43 IST)

தெலுங்கு நடிகர்களுக்கு ஒற்றுமை இல்லை… தன் பேச்சுக்கு விளக்கம் அளித்த நானி!

தெலுங்கு நடிகர் நானி தெலுங்கு நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

நானி நடிப்பில் உருவான ஷ்யாம் சிங்கா ராய் என்ற படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது பேசியபோது ‘ தெலுங்கு நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை. இங்கு நமக்குள் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் உள்ளன. அதை நாம்தான் தீர்க்கவேண்டும்’ எனக் கூறி இருந்தார். இது தெலுங்கு திரையுலகில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது தன் பேச்சுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘அந்த வார்த்தைகள் வலியால் வந்தவை. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என நான் விரும்பியதால் வந்த வார்த்தைகள்’ எனக் கூறியுள்ளார்.