குழந்தைக்கு தாயான பிரபல நடிகை!
நடிகை நந்திதா ’நர்மதா’ என்ற படத்தில் 7 வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கவுள்ளார்.
அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நந்திதா, பின்னாளில் நந்திதா ஸ்வேதா எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டார். எத்தனையோ படங்களில் நடித்தாலும், ‘அட்டகத்தி’ மற்றும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படங்கள் மட்டும்தான் வெற்றிப் படங்களாக அமைந்தன.
இதனால் தனது ரூட்டை மாற்றிகொண்ட அவர் காதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்பட்டார். அந்த வகையில் அவர் நர்மதா படத்தை தேர்வு செய்துள்ளார்.
இந்த படத்தில் அவர் 7 வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கவுள்ளார். இவருடன் நடிகர் விஜய் வசந்த் நடிக்கிறார். இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.