டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ‘நண்பர் அஜித்’ ஹேஷ்டேக்!
டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ‘நண்பர் அஜித்’
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் ஆடியோ விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் விஜய் பேசிய போது அஜித் குறித்து பேசினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் அஜித் குறித்து விஜய் பேசியது குறித்த ஒரு ஹேஷ்டேக் தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. அஜித் குறித்து விஜய் பேசிய போது ’ஒவ்வொரு ஆடியோ விழாவிற்கு போகும் போது சுமாராக டிரஸ் செய்துகொண்டு போகிறீர்கள், எனவே இந்த முறை கோட் சூட் அணிந்து செல்லுங்கள் என்று எனது காஸ்ட்யூம் டிசைனர் தெரிவித்தார்
சரி ஓகே என்று நான் கூறி நமது நண்பர் அஜித் மாதிரி டிரெஸ் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து கோட் சூட் போட்டேன் என்று விஜய் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அஜித் குறித்து விஜய் கூறியதும் அரங்கத்தில் இருந்தவர்கள் எழுப்பிய கரகோசம் மற்றும் கைத்தட்டல் அடங்க சில நிமிடங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டுவிட்டரில் எப்போதும் விஜய் ரசிகர்களுடன் மோதிக்கொள்ளும் அஜித் ரசிகர்கள் இன்று திடீரென ’நண்பர் அஜித்’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். இதனை அடுத்து அஜித், விஜய் ரசிகர்கள் இனிமேலாவது மோதிக் கொள்ளாமல் ஒற்றுமையுடன் செயல்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்