1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : திங்கள், 18 செப்டம்பர் 2017 (15:16 IST)

திருமண பந்தத்தில் இணையும் நலன் குமாரசாமி

இயக்குநர் நலன் குமாரசாமிக்கு, நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.



 
விஜய் சேதுபதி நடித்த ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. அதன்பிறகு, விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடித்த ‘காதலும் கடந்து போகும்’ படத்தை இயக்கினார். சில படங்களுக்கு கதைகளும் எழுதியுள்ளார். இவருக்கும், உறவுக்கார பெண்ணான சரண்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நவம்பர் மாதம் 9ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது.