சம்ந்தா பற்றி மூச்… பத்திரிக்கையாளர்களுக்கு கெடுபிடி வைத்த நாக சைதன்யா!
நடிகர் நாக சைதன்யா தான் கலந்துகொனட பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் சமந்தா பற்றி எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளாராம்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. ஆனால் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். அதற்கு மாமியார் வீட்டிலும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது.
ஆனால், அங்கு தான் பிரச்சனையே வெடித்தது. நடிப்பு சுதந்திரத்தை தாராளமாக பயன்படுத்திக்கொண்ட சமந்தா தி பேமிலி மேன் 2 தொடரில் மிகவும் மோசமான காட்சிகளில் நடித்ததால் குடும்பத்திற்குள் அவப்பெயர் உண்டாகிவிட்டதாக சமந்தாவை கணவர் கடிந்துக்கொண்டதாகவும் அதனால் அவர் வீட்டில் இருந்து வெளியேறியதோடு சமந்தா அக்கினேனி என்ற தனது பெயரை எஸ் என்று மட்டும் மாற்றிக்கொண்டதாக செய்திகள் வெளியாகியது. மேலும் அவர் கணவரை பிரிய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் அதெல்லாம் வதந்திகள் என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தனது கணவர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் லவ் ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளியானது. அதைப் பகிர்ந்த சமந்தா மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு படத்தின் நாயகி சாய்பல்லவி நன்றி தெரிவித்தார். ஆனால் நாக சைதன்யா எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில் லவ் ஸ்டோரி பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாக சைதன்யா படத்தைப் பற்றி மட்டுமே கேள்வி கேட்கவேண்டும் என்றும் சமந்தாவைப் பற்றி எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளாராம்.