திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (09:51 IST)

விரைவில் நானே வருவேன் போஸ்டர்… ஷூட்டிங் எப்போது?

நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பில் இன்னும் சில நாட்களில் கலந்துகொள்ள உள்ளார் தனுஷ்.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்துக்கான திரைக்கதை மற்றும் பாடல் மெட்டமைப்பது ஆகிய பணிகளில் செல்வராகவன் ஈடுபட்டு வந்தார். படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் படத்தின் பெயர் மற்றும் கதை ஆகியவை மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்துக்கு புதிதாக ராயன் என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கதைக்களத்தையும் கேங்ஸ்டர் களத்துக்கு மாற்றியுள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அந்தப் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் நானே வருவேன் படத்தையே தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக மேயாத மான் புகழ் இந்துஜா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதமே தொடங்க இருப்பதாக சொலல்ப்பட்டது. ஆனால் தாமதமாகிக் கொண்டே வந்த நிலையில் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதாம்.

இப்போது மாறன் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் தனுஷ் அதை முடித்துவிட்டு இந்த படத்தில் கலந்துகொள்ள உள்ளார். அதை ஒட்டி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகும் என சொல்லப்படுகிறது.