செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2024 (16:13 IST)

புஷ்பா 2 அதுவரை ஓடிடியில் ரிலீஸாகாது.. தயாரிப்பு தரப்பு விளக்கம்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார்.

இதையடுத்து சம்மந்தப்பட்ட தியேட்டர் மீதும் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டு ஒரே நாளில் இடைக்கால ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அல்லு அர்ஜுனின் கைது ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

அல்லு அர்ஜுன் கைதால் புஷ்பா 2 வசூல் 70 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படம் வெளியாகி 15 நாட்களில் உலகம் முழுவதும் புஷ்பா 2 திரைப்படம் 1500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் புஷ்பா 2 படம் ஜனவரி 9 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாகும் என தகவல்கள் பரவின. ஆனால் 56 நாட்களுக்கு முன்னர் எந்த ஓடிடியிலும் இந்த படம் ரிலீஸாகாது என படத்தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.