விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ படத்தில் மிஷ்கின் குரலில் ஒரு பாட்டு!
பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கியது.
ட்ரெயின் செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகை கனிகா நடிக்க உள்ளார். இது சம்மந்தமாக மிஷ்கினுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்திருந்தார்.
இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்துக்கான மிஷ்கின் இசையில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டு, அது மிஷ்கின் குரலிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் இந்த பாடல் மிக முக்கிய அம்சமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.