செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2024 (07:20 IST)

“இவனெல்லாம் என்ன பண்ணிக் கிழிக்கப்போறான்னு நினைக்கலாம்”- துப்பறிவாளன் 2 அப்டேட் கொடுத்த விஷால்!

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார்.

மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை. பின்னர் துப்பறிவாளன் 2 வின் லண்டன் படப்பிடிப்பு ஜனவரி 2022 ல் தொடங்கும் என அறிவித்திருந்தார் விஷால். ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அப்போது நினைத்தபடி ஷூட்டிங் தொடங்கவில்லை.

இதையடுத்து விஷால் தற்போது நடித்துள்ள ரத்னம் படத்தை எடுத்து முடித்ததும் துப்பறிவாளன் 2 படத்தை மே மாதம் லண்டனில் தொடங்க உள்ளார். இந்தபடம் பற்றி பேசியுள்ள விஷால் “துப்பறிவாளன் 2 மே மாதம் 3 ஆம் தேதி தொடங்குகிறது. இவனெல்லாம் என்ன பண்ணி கிழிக்கபோறான்னு பலர் நினைக்கலாம். ஆனால் களத்தில் இறங்க இதுதான் சரியான நேரம். இது நடக்கக் காரணமாக இருந்த மிஷ்கின் சாருக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.