செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (19:57 IST)

மிஷ்கின் பிறந்த நாளை கொண்டாடிய பிரபல இயக்குனர்கள்!

மிஷ்கின் பிறந்த நாளை கொண்டாடிய பிரபல இயக்குனர்கள்!
பிரபல இயக்குனர் மிஷ்கின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி அதையடுத்து அவருக்கு தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள் நேரில் வாழ்த்து கூறியுள்ளனர் 
 
இயக்குனர் மிஷ்கின் தனது அலுவலகத்தில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், பிரபல இயக்குநர் கௌதம்மேனன், இயக்குனர் சசி, இயக்குனர் லிங்குசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர் 
 
மிஸ்கின் கேக் வெட்டிய போது அவருக்கு இயக்குனர்கள் கேக் ஊட்டி விட்டனர் என்பதும் இந்த பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 
இந்த நிலையில் இன்று மிஷ்கின் தனது பிறந்த நாளையடுத்து ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பை அவர் வெளியிட்டார் என்பதும், இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது