எனக்கு பிடித்த நடிகர் இவர் தான் - அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விருமன். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கர் மகள் அதிதி நடித்துள்ளார். இவர்களுடன் கருணாஸ், சூரி, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர்.
நடிகர் சூர்யா – ஜோதிகா தயரித்துள்ள இப்படத்திற்கு,யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் 12 ஆம் தேதி ரிலீஸாகிறது.
சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. பிரமாண்டமான நடந்த விழாவில் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
விருமன் படம் திரைக்கு வரும் முன்னரே அதிதி ஷங்கர், சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த நிலையில், நடிகை அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் தனக்குப் பிடித்த நடிகர் சூர்யா எனவும், அவரது தீவிர ரசிகை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் சூர்யாவின் படத்தில் அதிதி ஷங்கர் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.