1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (16:06 IST)

ராஜ்கிரணுக்கு ரெண்டே ரெண்டு ஜோக் தான் சொன்னேன்: அதிதி ஷங்கர்

Aditi
ராஜ்கிரண் அவர்களுக்கு இரண்டே இரண்டு ஜோக் சொன்னேன் என்றும் அந்த ஜோக்கை கேட்டு அவர் வெறுத்து போய் விட்டார் என்றும் ’விருமன்’ படத்தின் புரமோஷன் விழாவில் நடிகை அதிதி ஷங்கர் கூறியுள்ளார் 
 
கார்த்தி மற்றும் அதிதிஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’விருமன்’. இந்த படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விழாவில் அதிதிஷங்கர் பேசியபோது அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். அப்போது அவர் ராஜ்கிரணுக்கு நன்றி தெரிவிக்கும் போது அவருக்கு இரண்டே இரண்டு ஜோக் தான் சொன்னேன் என்றும் அந்த ஜோக்கை கேட்டு அவர் வெறுத்து போய் விட்டார் என்றும் யாருமா நீ? எங்கே இருந்து வந்திருக்கிறாய் என்று கேட்டார் என்றும் தெரிவித்தார் 
 
இருப்பினும் ராஜ்கிரண் அவர்களுடன் பணிபுரிந்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்றும் அதிதி ஷங்கர் அந்த மேடையில் அறிவித்தார்.