ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2023 (16:47 IST)

தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த நடிகர் விஜயகாந்த் - சோனு சூட்

தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த நடிகர் விஜயகாந்த் என்று சோனு சூட் தெரிவித்துள்ளர்.

இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் சோனு சூட் . இவர் கள்ளழகர் என்ற படத்தில் விஜயகாந்திற்கு வில்லனாக நடித்தவர். அதன்பின்னர்,   நெஞ்சினிலே, மஜ்னு, ராஜா ஆகிய படங்களில் நடித்தார்.

அதன்பிறகு, அனுஷ்கா நடித்த  அருந்ததி படத்தில் வில்லனாக மிரட்டினார்.

தற்போது, இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ள சோனு சூட், கொரொனா கால ஊரடங்கின்போது, வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வர விமான உதவி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் பேருந்து வசதி, தொழிலாளர்களுக்கு உதவி, விவசாயிகளுக்கு டிராகடர், மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் எனத் தொடர்ந்து உதவி செய்யும் நடிகர்  சோனு சூட் உருவத்தில்  சிலை வைத்து வணங்கிய வீடியோக்களும் வைரலானது.


இந்த நிலையில்,  தன் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு சோனு சூட் பதிலளிப்பது வழக்கம். அதன்படி, ரசிகர் ஒருவர் தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு, ‘’விஜயகாந்த் சார்’’ என்று கூறிய சோனு சூட், ‘’அவர்தான் எனக்கு தமிழில் முதல் பிரேக் கொடுத்தார்’’ என்று தெரிவித்துள்ளார்.