1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 25 நவம்பர் 2017 (19:51 IST)

என் தம்பி ஆங்கில படத்தில் நடிச்சிட்டான்: இயக்குநர் மோகன் ராஜா பெருமை

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் 'டிக் டிக் டிக்' திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இந்தப் படம் ஹாலிவுட் படங்களோடு ஒப்பிடும் அளவிற்கு மிக பிரமாண்டமாக உள்ளது. இப்  படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இப்படத்தினை நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ஜெயம் ரவியின்  மகன் ஆரவ்வும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் விண்வெளிப் படமான இதில் இந்தியாவை தாக்கவரும் ஒரு விண்கல்லை இடைமறித்து தகர்க்க ஜெயம் ரவி குழுவினர் எடுத்துக்கொள்ளும் மிஷன்தான் இந்த டிக் டிக் டிக்.
 
பிரபல இயக்குனரும் ஜெயம் ரவியின் அண்ணனுமான மோகன் ராஜா என் தம்பி இங்கிலிஷ் படத்துல நடிச்சுட்டான் என  ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் தரத்தின் அளவீட்டை உயர்த்தியதற்காக நன்றி என்று கூறியுள்ளார். 
 
சினிமாவில் மோகன் ராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் ஜெயம் ரவி என்பது குறிப்பிடத்தக்கது.