வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (14:36 IST)

திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த இமான்… குவியும் வாழ்த்துகள்!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இமான் திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆனவர்களில் இமானும் ஒருவர். தனது 18 ஆவது வயதில் தமிழன் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் சினிமா வாழ்வின் உச்சமாக ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்துக்கு இசையமைத்தார்.

வரிசையாக முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர் படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் தற்போது திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து மைல்கல் சாதனையை எட்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.