வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (18:57 IST)

ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் போது மாரடைப்பு.. நடிகை எம்.என்.ராஜம் மகள் மரணம்..!

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மகள் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 50 கள், 60களில் எம்ஜிஆர் , சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்எஸ்ஆர் உட்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்தவர் நடிகை எம்.என்.ராஜம் . இவரது கணவர் பிரபல பாடகர் ஏ.எல் ராகவன் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் எம்.என்.ராஜம்  மகள் நளினா என்பவர் இன்று ஜிம்மில்  வொர்க்-அவுட்  செய்து கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டது என மருத்துவர்கள் கூறியதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன

மறைந்த நளினா, சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் என்றும் அவர் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவர் இந்தியா வந்தவுடன் அவரது இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது’

Edited by Siva