புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 ஏப்ரல் 2021 (16:16 IST)

கார்த்தி & மித்ரன் படம் தள்ளிவைப்பு… காரணம் பொன்னியின் செல்வன்தானாம்!

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.

இயக்குனர் மித்ரன் கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க நீண்ட காலமாக காத்திருந்தார். இடையில் கார்த்தி பொன்னியின் செல்வனுக்காக நீளமான தலைமுடி வளர்த்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது. ஏப்ரல் மாதத்தில் கார்த்தி சம்மந்தமான காட்சிகள் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிந்துவிடும் என நினைத்து படப்பிடிப்பு வேலைகளை தொடங்கினார்கள். ஆனால் கார்த்தி காட்சிகள் முடிவதில் இன்னும் சில நாட்கள் ஆகும் என சொல்லப்படுவதால், மித்ரன் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.