எம்.ஜி.ஆர் & ஜெயலலிதா நடிப்பில் பொன்னியின் செல்வன் – முதல் பாடல் இதோ !
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அனிமேஷன்களை உருவாக்கி பொன்னியின் செல்வன் பாகம் 1’ எனும் அனிமேஷன் படம் உருவாகியுள்ளது.
கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க எம்.ஜி.ஆர் 40 வருடங்களுக்கு முன்னதாக முயற்சி செய்தார். அதற்காக இயக்குனர் மகேந்திரன் திரைக்கதை அமைத்துக் கொடுத்தார். அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த முயற்சி கைகூடவில்லை. இதனையடுத்து இப்போது மணிரத்னம் அந்த முயற்சியில் வெற்றி கண்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் தோற்றத்தை அனிமேஷனில் வரைந்து வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1 என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளது. இந்த படத்தின் பாடல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. பெரியார் குத்து’ பாடல் புகழ் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்க மதன் கார்க்கி இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.