திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (08:53 IST)

விஜய் மகனின் கனடா இரவு ரகசியங்கள்... தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் மாடல் அழகி!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் கடந்த சில நாட்களாக திரையுலக நட்சத்திரங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வருகிறார்.அதிலும் குறிப்பாக விஜய் மற்றும் சூர்யா இருவரையும் மோசமாக விமர்சித்தது சமூகவலைதளத்தில் கொதிநிலையை உருவாக்கியது.

இதனால் கோபமான அவ்விரு நடிகர்களின் ரசிகர்கள் மீராவை ஆபாச வார்த்தையால் திட்டுவதாகவும், இனிமேல் என்னை ஆபாசமாக பேசினால் ‘நானும் பதிலுக்கு ஜோதிகா மற்றும் சங்கீதாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவேன் என சில ஆபாசமான வார்த்தைகளை சொல்லி வெளிப்படையாக வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து மீரா மிதுன் அத்துமீறிய பேச்சுக்கு பிரபலங்கள் மட்டுமல்லாது அவரின் ரசிகர்களும் மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்ப்போது டிக்டாக்கில் பிரபலமான பெண் ஒருவர் தான் விஜய்யின் தீவிர ரசிகை என கூறி அவரை பற்றி பேச உனக்கு எந்த தகுதியும் என மீராவை கெட்ட வார்த்தைகளால் கடுமையாக திட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அவரின் வீடியோவிற்கு பதிலளித்த மீரா மிதுன், " விஜய் ரசிகர்கள் அவரின் ஆசிர்வாதத்தில் தான்  இப்படி வீடியோவை வெளியிடுகின்றனர். அத்துடன், விஜய் மகன் ஜேசனின் கனடா இரவு ரகசியங்கள் எனக்கு தெரியும் என்று கூறி மீண்டும் விஜய் ரசிகர்களின் கடுங்கோபத்திக்கு ஆளாகியுள்ளார்.