1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (21:06 IST)

யாருடா இந்த பொண்ணு.?. ஹவ் டு ஐ டெல் யூ? - தெறிக்கும் பிக்பாஸ் மீம்ஸ்

பிக்பாஸ் சீசன்2 நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் அது தொடர்பான மீம்ஸ்களை உருவாக்கும் வேலையில் நெட்டிசன்கள் இறங்கி விட்டனர்.

 
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகத்தையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனின் முதல் நிகழ்ச்சி நேற்று மாலை 7 மணிக்கு தொடங்கியது.

 
இந்நிலையில், வழக்கம் போல் இந்த நிகழ்ச்சி தொடர்பான மீம்ஸ்களை உருவாக்கும் வேலையில் நெட்டிசன்கள் இறங்கி விட்டனர். குறிப்பாக பொன்னம்பலம், யாஷிகா ஆனந்த், ஆனந்த் வைத்தியநாதனை வைத்து அவர்கள் மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.
 
பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும் சில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு...