மாஸ்டர் ட்ரைலர் இன்று ரிலீஸ்? அவசர அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. ஆம், இன்று வெளிவருவதாக இருந்த இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊர் உலகமே வீட்டிற்குள் முடங்கியிருப்பதால் இப்படத்தின் ட்ரைலர் மார்ச் 31-க்கு மேல் எதிர்பார்க்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. எனவே கொரோனா பிரச்னை முடிந்த பிறகு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.