1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (16:11 IST)

விஜய்சேதுபதியின் ‘மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு!

விஜய்சேதுபதியின் ‘மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு!
விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது போல சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது 
மேலும் இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி மற்றும் தமன்னா தொகுத்து வழங்கப் போவதாகவும் கூறப்பட்டதுல் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சன் டிவியில் விஜய் சேதுபதி நடத்தும் பிரம்மாண்டமான சமையல் கலை நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சி ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குக் வித் கோமாளி அளவுக்கு புகழ் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்