புதன், 11 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2023 (20:56 IST)

''மார்க் ஆண்டனி'' : பாடகர் அவதாரம் எடுத்த நடிகர் விஷால்!

நடிகர் விஷாலின் ‘’மார்க் ஆண்டனி’’ படத்தின்  மூலம் விஷால் பாடகராக அறிமுகமாகிறார்.
 

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் விஷால், எஸ். ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் வித்தியாசமான கெட்டபில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த  நிலையில், ‘’மார்க் ஆண்டனி’’ படத்தின்  #AdhiridhuMaame ‘’அதிருது மாமே’’ என்ற முதல் சிங்கில் பாடலை  டி.ராஜேந்தர் பாடியுள்ள்ளார்.   சமீபத்தில், இப்பட பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது படக்குழு.

இப்படம்  விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டு     ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில்,  நடிகர் விஷால் இப்படத்தின் மூலம் பாடகர் அவதாரம் எடுத்துள்ளார்.  இப்படத்தின் முதல் சிங்கில் அதிருதா என்ற பாடலை தமிழில் டி.ராஜேந்தர் பாடியுள்ளார். இப்பாடல் நாளை வெளியாகிறது.

தெலுங்கில் ‘’அதரடதா’’ எனும் இப்பாடலை  விஷால் பாடியுள்ளதாக படக்குழுவினர்  தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி விஷால் கூறியுள்ளதாவது: ‘’மார்க் ஆண்டனியின் ‘’தெலுங்குப் பதிப்பிற்கு  ஒரு பாடியுள்ளேன். இதன் மூலம் பாடகராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.