செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (09:26 IST)

தனுஷை சந்திக்க லண்டன் பறந்த ‘பரியேறும் பெருமாள்’ இயக்குனர்!

’பரியேறும் பெருமாள்’ என்ற ஒரே படத்தில் பெரும் புகழ்பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்த படத்திற்கான பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்து விட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ’கர்ணன்’என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது 
 
 
மேலும் தனுஷ் ஜோடியாக இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை ரஷிசா விஜயன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்து தனுஷிடம் நேரடியாக விவாதிக்க இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது லண்டன் சென்றதாகவும் அங்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தனுஷிடம் அவர் ஆலோசனை செய்து வருவதாகவும் தனுஷிடம் ஆலோசனை பெற்ற பின்னர் அவர் மீண்டும் சென்னை திரும்பி படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் லண்டனில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
 
 
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் வரும் நவம்பர் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது