1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (15:27 IST)

மாரிமுத்து மறைவு பெரும் நெருக்கத்தை உண்டாக்கி விட்டது: மாரி செல்வராஜ்

மாரிமுத்து மறைவு பெரும் நெருக்கத்தை உண்டாக்கி விட்டது என இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
நடிகர் மாரிமுத்து இயல்பான மனிதர். அவரது இழப்பு நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. என்னுடன் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் பணியாற்றினார்.
 
ஒரு இயக்குநருக்கு நடிகருடைய ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து, அதனை உள் வாங்கிக் கொண்டு நடிப்பவர். இயக்குநராக 2 படம் எடுத்து முடித்த பிறகு  ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடிக்க வந்தார்
 
எனது அரசியலை புரிந்து கொண்டு அந்த படத்தில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தார். அது மறக்க முடியாத அனுபவம்.
 
அவரது இறப்பு எல்லாருக்கும் பெரும் நெருக்கத்தை உண்டாக்கி விட்டது
 
இவ்வாறு இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran