1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (14:55 IST)

அவர் வாழக்கை சுலபமானதாக இருக்கவில்லை… மாரிமுத்து மறைவுக்கு நடிகர் பிரசன்னா இரங்கல்!

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான குணச்சித்திர நடிகராக இருந்து வந்த மாரிமுத்து இன்று காலை திடீர் மாரடைப்பால் இயற்கை எய்தினார். நடிகராக அறியப்படும் மாரிமுத்து கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் என இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதபாத்திரத்தில் நடித்து வந்த அவருக்கு எதிர்பார்க்காத அளவுக்கு பிரபல்யம் கிடைத்தது.அவரின் வீடியோக்கள் மீம்களாகவும் ரீல்ஸ்களாகவும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பரவி வைரலாகின.

இந்நிலையில் அவர் இயக்கிய கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் ஆகிய படங்களில் நடித்த பிரசன்னா வெளியிட்டுள்ள இரங்கலில் “அவர் மறைவு செய்தியைக் கேட்டு உறைந்துவிட்டேன். நாங்கள் இருவரும் சகோதரர்களாக பழகினோம்.  அவர் வாழக்கை சுலபமானதாக இருக்கவில்லை. ஒரு நடிகராக அவர் இப்போது முன்னேறிக் கொண்டிருந்தார்.  அவர் இன்னும் பல ஆண்டுகாலம் வாழ்ந்திருக்க வேண்டும்…. போய்ட்டு வாப்பு” என தெரிவித்துள்ளார்.