1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (15:03 IST)

விரைவில் அவருடன் இணைந்து படம் பண்ண இருந்தேன்… இயக்குனர் மாரி செல்வராஜ் உருக்கம்!

தமிழ் சினிமாவின் முக்கியமான குணச்சித்திர நடிகராக இருந்து வந்த மாரிமுத்து இன்று காலை திடீர் மாரடைப்பால் இயற்கை எய்தினார். நடிகராக அறியப்படும் மாரிமுத்து கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் என இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார்.

அவரின் இந்த அதிர்ச்சி மரணம் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் இடையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது குடும்பத்தினருக்கு  இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் “அண்ணனின் இறப்பை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.  காலையில் எழுந்த போதே ஒரு சோகமான செய்தி. என் முதல்படத்தில் எனக்குப் பல விதத்தில் உறுதுணையாக இருந்தார். என்னோடு தொடர்பில் இருந்தார். விரைவில் அவருடன் இணைந்து ஒரு படம் பண்ண இருந்தேன். பல புதுமுக இயக்குனர்களுக்கு பக்கபலமாக இருந்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என இரங்கல் தெரிவித்துள்ளார்.