திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 1 அக்டோபர் 2020 (21:12 IST)

மனதை உருக்கும் "மறையாத கண்ணீர் இல்லை" பாடல்!

96 படத்தில் பதின்பருவ ஜானுவாக நடித்த கௌரி கிஷன் ஒருப் புதியப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலிஸான 96 படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வழக்கமான மசாலா அம்சங்கள் எதுவும் இல்லாமல் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் வெற்றியடைந்ததற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, சிறுவயது ராம் ஜானுவாக நடித்த ஆதித்யா மற்றும் கௌரியின் நடிப்பும் ஆகும். இதை எடுத்து நிறைய குறும்படம் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது "மறையாத கண்ணீர் இல்லை" என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான இதன் போஸ்டர் மற்றும் டீசர் உள்ளிட்டவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்ப்போது இதன் முழு பாடல் வெளியாகி அனைவரது மனதையும் உருகவைத்துள்ளது. வழக்கம் போலவே கௌரி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தினேஷ் இளங்கோ மற்றும் அட்சய் SV இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பாடலை சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ஸ்ரீநிஷா ஜெயசீலன் தன் மெல்லிய குரலில் பாடி ரசனையில் ஆழ்த்தியுள்ளார்.