ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2023 (09:55 IST)

பாரதிராஜா நடிப்பில் மனோஜ் இயக்கும் ‘மார்கழி திங்கள்’!

தாஜ்மஹால் படத்தின்  மூலம் 1999 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் மனோஜ் பாரதிராஜா. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் அவரால் பெரிய அளவில் கதாநாயகனாக வரமுடியவில்லை. இதனால் அவர் தந்தையைப் போல இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டார். சிவப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இயக்குனர் ஆகும் கனவோடு இருந்த தன்னை தனது தந்தைதான் நடிகராக்கிவிட்டார் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது மனோஜ், மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் பாரதிராஜா, வினோத் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க, சுசீந்திரன் தன்னுடைய வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க, இம்மாத இறுதியில் இந்த படம் தொடங்கப்பட உள்ளது.