புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2020 (15:12 IST)

ரஜினிக்கு டூப் போட்ட பாரதிராஜா மகன்! எந்த படத்தில் தெரியுமா?

ரஜினி நடித்த எந்திரன் படத்தில் அவருக்கு டூப்பாக மனோஜ் பாரதிராஜா நடித்துள்ளார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கி வெளியான திரைப்படம் எந்திரன். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் ரஜினி விஞ்ஞானியாகவும், ரோபாட்டாகவும் இருவேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்துக்கு டூப் போட்டது இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜாதான் என்பது வெளியாகியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் தனது சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. இரண்டு ரஜினி கதாபாத்திரங்களும் ஒரே இடத்தில் தோன்றும் காட்சியில் மனோஜ் நடித்திருப்பது தெரியவந்துள்ளது.