திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 21 ஜூன் 2023 (16:39 IST)

துணிவு படத்துக்குப் பிறகு மஞ்சு வாரியர் நடிக்கும் அடுத்த தமிழ் படம் என்ன?.. லேட்டஸ்ட் தகவல்!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான எஃப் ஐ ஆர் திரைப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், தற்போது சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்துக்கு Mr.X. என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனத்தைக் குவித்துள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க மஞ்சு வாரியர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் இணைந்து நடித்திருந்த துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, அவரின் கதாபாத்திரமும் பாராட்டுகளைக் குவித்தது.