திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (15:11 IST)

பாபா படத்துக்குப் பிறகு என் கேரியர் முடிந்தது… பிரபல நடிகை ஓபன் டாக்!

தமிழில் பம்பாய், இந்தியன் மற்றும் உயிரே போன்ற முக்கியமான படங்களின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா. ஒரு காலத்தில் இவரின் தேதிகளுக்காக பாலிவுட் உலகமே காத்துக் கிடந்தது. ஆனால் மார்க்கெட் இழந்த போது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டு வந்தார். அதன் பின் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதற்கிடையில் சில உடல்நலப் பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் தேறி இப்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.  இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது குறித்து பேசியுள்ள அவர் “பாபாதான் கடைசியாக நான் நடித்த பெரிய தென்னிந்திய திரைப்படம். அந்த படம் தோல்வி அடைந்ததால் என் தென்னிந்திய சினிமா கேரியர் முடிவடைந்தது என்று நினைத்தேன். அப்படியேதான் நடந்தது. அந்த படத்துக்கு முன்பு பெரிய நிறைய தென்னிந்திய படங்களில் நடித்திருந்தேன்” எனக் கூறியுள்ளார்.