இப்போதும் நான் கவர்ச்சி நாயகிதான்… மனிஷா கொய்ராலாவின் நீச்சல் உடை புகைப்படம்!
நடிகை மனிஷா கொய்ராலா நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழில் பம்பாய், இந்தியன் மற்றும் உயிரே போன்ற முக்கியமான படங்களின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா. ஒரு காலத்தில் இவரின் தேதிகளுக்காக பாலிவுட் உலகமே காத்துக் கிடந்தது. ஆனால் மார்க்கெட் இழந்த போது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டு வந்தார். அதன் பின் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது 50 வயதாகியுள்ள மனிஷா கொய்ராலா தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இப்போதும் தனக்கு படங்களில் நீச்சல் உடையில் நடிக்கும் வாய்ப்புகள் வருவதாகக் கூறியுள்ளார்.