1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (12:21 IST)

நவம்பரில் ரிலீஸாகுமா ‘பேரன்பு’?

ராம் இயக்கியுள்ள ‘பேரன்பு’ படம் நவம்பரில் ரிலீஸாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


 

 
‘தரமணி’ படத்தைத் தொடர்ந்து ராம் இயக்கியுள்ள படம் ‘பேரன்பு’. மலையாள முன்னணி நடிகரான மம்மூட்டி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அஞ்சலி ஹீரோயினாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ‘தங்க மீன்கள்’ சாதனா, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் இவர்களுடன் நடித்துள்ளனர். பி.எல்.தேனப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசைக் கோர்ப்பில் தீவிரமாக இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. நமக்கு கிடைத்த தகவல்படி, இன்னும் 20 நாட்களில் சென்சாருக்கு படம் அனுப்பப்பட்டுவிடும். எனவே, நவம்பரில் ரிலீஸாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.