புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2017 (06:50 IST)

'நிச்சயமாக நான் உங்களுடன் இருப்பேன்: ராம்ஜெத்மலானிக்கு வாக்கு கொடுத்த வைகோ

சமீபத்தில் வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவராகிய ராம்ஜெத்மலானி அவர்களின் 94வது பிறந்த நாளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



 
 
ராம்ஜெத்மலானி அவர்களுக்காக செய்யப்பட்ட சிறப்பு ஏலக்காய் மாலையை போட்ட வைகோ அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். 
 
தனக்கு வாழ்த்து தெரிவித்த வைகோவிடம் ராம்ஜெத்மலானி, 'இந்தியா முழுதும் பா.ஜ.க, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டதாகவும், அதற்குப் பதிலளித்த வைகோ, 'நிச்சயமாக நான் உங்களுடன் இருப்பேன்' என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.