ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (08:09 IST)

அதர்வா படத்தை டீலில் விட்ட பிரேமலு மம்தா பைஜூ… காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா பரதேசி படத்துக்குப் பிறகு கவனம் பெற்ற நடிகராக உருவாகியுள்ளார். ஆனால் அவர் நடிப்பில் வெளியான ஈட்டி தவிர வேறு எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அவர் படங்கள் எதுவும் சமீபகாலமாக ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் அவர் லைகா நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்காக வெளிநாடு செல்ல விசா நடைமுறைகளை படக்குழு மேற்கொண்ட நிலையில் கடைசி கட்டத்தில் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் மமிதா.

அதற்குக் காரணம் அவர் விஜய் 69 படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதுதான் காரணமாம். விஜய் போன்ற பெரிய நடிகரின் படத்தில் நடிக்கும் போது இந்த படம் வேண்டாம் என அவர் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.