திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2019 (14:32 IST)

எட்டு பேர் சேர்ந்துகொண்டு என்னை....! கமல் உண்மையை மறைத்துவிட்டார்!

கடந்த ஜூன் 23ம் தேதி விஜய் டிவியில் 15 போட்டியாளர்களை கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. பின்னர் வைல்ட் கார்டு மூலம் சில போட்டியாளர்கள் நுழைந்தனர். இதில் காமெடி நடிகையான மதுமிதாவும் பங்குபெற்றிருந்தார். 


 
இந்நிகழ்ச்சியில் ஹெலோ ஆப்பின் சார்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் நினைக்கும் கருத்தை கூறலாம் என்பது தான் அந்த டாஸ்க். இதில் மதுமிதா காவிரி பிரச்சனையை குறித்து பேசியதால் சக போட்டியார்கள் பிக்பாஸை அரசியலாக்குவதாக கூறி வாக்குவாதம் செய்தனர். எனவே தான் சொன்ன கருத்தை உண்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் தான் சொன்னேன் என்று கூறி அதனை நிரூபித்து காட்ட  கையை அறுத்துக்கொண்டார் மதுமிதா. இதனால் அவர் அந்நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டார். 


 
இந்நிலையில் தற்போது பிக்பாஸில் நடந்து மறைக்கப்பட்ட பல விஷயங்களை குறித்து தற்போது மதுமிதா, முதன்முறையாக பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது " நான் காவிரி பிரச்னையை குறித்து ஒரே ஒரு வரியில் தான் கவிதை கூறினேன் அதற்கு சேரன்,  கஸ்தூரியை தவிர வீட்டிலிருந்த மற்ற 8 போட்டியார்களும் தன்னை மிகவும் கீழ்த்தரமாக கிண்டலடித்தனர். 


 
நான் பிக்பாஸை அரசியலாக்குவதாக கூறி என்னுடன் அந்த 8 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கிண்டடித்து வந்தனர். பின்னர் பிக்பாஸில் இருந்து "அரசியல் பேசாதீங்க இதை ஒளிபரப்பமாட்டோம்" என்று கூறி ஒரு கடிதம் வந்தது. அதனை பார்த்த உடனே அந்த 8 பேருக்கும்  அல்வா சாப்பிட்டது போல் ஆகிவிட்டது. அதற்கடுத்து தான்,  நான் கூறிய கருத்து உண்மை என்பதை நிரூபிக்க கையை அறுத்துக்கொண்டேன். ஆனால், ரத்தம் கொட்டும் போது கஸ்தூரி மற்றும் சேரனை தவிர அங்கிருந்த அனைவரும் சிரித்து வேடிக்கை மட்டும்மே பார்த்தனர். இதை கமல் ஹாசன் சாரும் தட்டி கேட்காதது தான் எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது என மதுமிதா அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.