ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (16:17 IST)

பாலா படத்தின் ராசி அப்படி – பல வருடங்களுக்குப் பிறகு புகைப்படம் வெளியிட்ட நடிகை!

அவன் இவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த மதுஷாலினி இப்போது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலா படங்களில் நடிக்கும் கதாநாயகர்கள் எல்லாம் பெரிய உயரங்களை அடைவார்கள். ஆனால் அவரின் பட கதாநாயகிகள் சோபிக்கமாட்டார்கள் அல்லது சினிமாவை விட்டே விலகிவிடுவார்கள் என்று சொல்லப்படுவது வழக்கம். அப்படி லைலா, பூஜா, சங்கீதா, அபிதா ஆகியோர் இந்த பட்டியலுக்குள் வருவார்கள்.

அந்த வகையில் பாலாவின் அவன் இவன் திரைப்படத்தில் அறிமுகமான மதுஷாலினியும் ஒருவராக மாறியதுதான் துயரம். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த அவருக்கு அதன் பிறகு தூங்கா இரவுகள் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே சிறு வேடங்கள் கிடைத்தன. அதையடுத்து அவர் ஆளே காணாமல் போனார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது அவர் கவர்ச்சியான தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார்.