இன்று தொடங்குகிறது தனுஷ் நடிக்கும் ‘மாரி 2’ ஷூட்டிங்
நடிகர் தனுஷ் நடிக்கும் ‘மாரி 2’ படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது.
தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘மாரி’. பாலாஜி மோகன் இயக்கிய இந்தப் படத்தில், தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும், ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்திருந்தார்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், ஜனவரி மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
தனுஷ் தற்போது கெளதம் மேனன் இயக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார். அதற்காக அவர் மீசை - தாடியை மழித்திருக்கிறார். எனவே, தனுஷ் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்க பாலாஜி மோகன் திட்டமிட்டுள்ளார்.