திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (10:08 IST)

மாநாடு படம் எனக்குதான் முதலில் வந்தது… நான் கேட்ட டைம் அவங்க கொடுக்கல… வருத்தத்தைப் பகிர்ந்த அரவிந்த் சுவாமி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்த மாநாடு திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்த படம் சமீபகாலத்தில் எதுவுமே இல்லை.

திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு சிம்புவுக்கு இணையான காரணமாகவர் அமைந்தவர் எஸ் ஜே சூர்யா. தனுஷ்கோடி என்ற போலீஸ் பாத்திரத்தை ஏற்று நடித்த அவர், பேசிய வசனங்கள் எல்லாம் படம் ரிலீஸான போது வைரல் ஆகின.

இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அரவிந்த் சுவாமிதானாம். அப்போது அவர் கதாபாத்திரம் பிடித்து, அதில் நடிக்க ஒரு மாதம் டைம் கேட்டாராம். ஏனென்றால் அப்போது அவர் வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம். ஆனால் படக்குழு, உடனடியாக ஷூட்டிங்கைத் தொடங்கவேண்டும் என எஸ் ஜே சூர்யாவை வைத்து எடுத்தார்களாம். அந்த கதாபாத்திரத்துக்குள் தான் முழுவதுமாக சென்றுவிட்டதாகவும், இன்று வரை அந்த படத்தைத் தான் பார்க்கவில்லை என்றும் அரவிந்த் சுவாமி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.