1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (11:20 IST)

3 வாரங்களில் 53 கோடி ரூபாய் வசூல்! மாநாடு படத்தின் கலெக்‌ஷன்!

மாநாடு திரைப்படம் 3 வாரங்களில் 53 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த மாநாடு படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் வெளியாகி 3 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் மாநாடு படம் தமிழகத்தில் மட்டும் மொத்தமாக 53 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இந்த விவரத்தை மாநாடு படத்தின் விநியோக நிறுவனத்தோடு தொடர்புடைய Rock Fort நிறுவனத்தின் Creative Producer ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். 3 வாரங்களைக் கடந்தும் சில திரைகளில் கணிசமாக மாநாடு ஓடிக் கொண்டு இருக்கிறதாம்.