திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (15:33 IST)

முதல் முறையாக ஹாரர் களத்தில் களமிறங்கும் எம் ராஜேஷ்!

இயக்குனர் எம் ராஜேஷ் மிஸ்டர் லோக்கல் படத்துக்கு பிறகு இப்போது ஹன்சிகாவை வைத்து இப்போது ஒரு வெப் தொடரை இயக்கி வருகிறார்.

சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய ஹிட் படங்களின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இயக்குனர் எம் ராஜேஷ். ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் பார்முலா படங்கள் ரசிகர்களுக்கு போரடிக்க ஆரம்பித்ததால் வரவேற்புப் பெறவில்லை. ஆனாலும் ராஜேஷ் இன்னும் பார்முலாவை மாற்றவில்லை. இந்நிலையில் இப்போது அவர் நடிகை ஹன்சிகாவை கதாநாயகி ஆக்கி, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக ஒரு வெப் சீரிஸை இயக்கி வருகிறாராம்.

வழக்கமாக காமெடி படங்களையே தனது கதைக்களமாக எடுத்துக்கொள்ளும் எம் ராஜேஷ், இந்த முறை முதல் முறையாக ஹாரர் களத்தில் புகுந்துள்ளாராம். 40 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கும் விதமாக ஊட்டியில் இப்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம்.