திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (19:38 IST)

கமல் மேல் லைகா அதிருப்தி… மெஹா பட்ஜெட்ல கழட்டிவிட்டதின் எதிரொலி!

இயக்குனர் மணிரத்னம் நடிகர் கமல் கூட்டணி 35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து கமல்ஹாசன் வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். அந்த வகையில் அவரை இயக்க உள்ள இயக்குனர்களின் பட்டியலில் மகேஷ் நாராயணன், ப ரஞ்சித், வெற்றிமாறன், ஹெச் வினோத் ஆகியோர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் 68 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானது.  ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்த இந்த படத்தை கமல், மணிரத்னம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் தங்களை இணைத்துக் கொள்ளாதது குறித்து லைகா நிறுவனம் மிகப்பெரிய அதிருப்தியில் உள்ளதாம். அதனால் லைகா சுபாஷ்கரன் கமல்ஹாசனின் பிறந்தநாள் நிகழ்வில் கூட கலந்துகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.