வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (19:32 IST)

துணிவு படத்தில் நான் வில்லன் இல்லை… செகண்ட் ஹீரோ… பிரபல நடிகர் சொன்ன தகவல்!

துணிவு படத்தில் சார்பட்டா பரம்பரை படம் மூலமாக கவனம் ஈர்த்த ஜான் கொக்கன் நடிக்கிறார்.

அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து நேற்று அஜித் டப்பிங் பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ‘துணிவு படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறீர்களா’ என்று கேட்க ‘இல்லை நான் முதல் முறையாக பாசிட்டிவ் ரோலில் நடிக்கிறேன். படத்தின் செகண்ட் ஹீரோ போன்ற ரோல்’ எனக் கூறியுள்ளார். ஜான் கொக்கன் வீரம், பாகுபலி மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.