செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2024 (14:12 IST)

‘பா ரஞ்சித், மாரி செல்வராஜ் படைப்புகள் ஆக்ரோஷமாகதான் இருக்கும்’… லப்பர் பந்து இயக்குனர் கருத்து!

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான திரைப்படம் ‘லப்பர் பந்து’ இந்த படத்தில் கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி சீரிஸில் நடித்து புகழடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடிக்க மற்ற துணை கதாபாத்திரங்களில் பால சரவணன், ஜென்சன் திவாகர் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து மனித உணர்வுகளைப் பேசிய இந்த படம் வெளியானது முதலே பாராட்டுகளைப் பெற்றது. ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் பல காட்சிகளை விசிலடித்துக் கொண்டாடி மகிழ்ந்து பாராட்டி ரசித்து மகிழ்கின்றனர். இதையடுத்து கடந்த வாரம் ரிலிஸான ஆறு படங்களில் லப்பர் பந்து  மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து நம்பிக்கை அளிக்கும் இயக்குனராக உருவாகியுள்ளார். அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் “படத்தில் வரும் சில தவறுகளை நானும் செய்துள்ளேன். நான் சாதிய பாகுபாடுகளை வேடிக்கைப் பார்த்தவன். அதனால் என் படத்தில் பிரச்சனை இலகுவாகக் கையாளப்பட்டிருக்கலாம். ஆனால் பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்றவர்கள் இதில் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் அவர்களின் படைப்புகள் ஆக்ரோஷமாகவும் அழுத்தமாகவும்தான் இருக்கும். அவற்றுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.