வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (16:32 IST)

கன்ஃபக்சன் ரூம்ல என்ன நடக்குதுன்னு யாருக்கும் தெரியலை: கஸ்தூரி

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று சாக்சி வெளியேற போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் லாஸ்லியா காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அபிராமி, சாக்சி ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற போவது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இங்குள்ள கன்ஃபக்சன் அறையில் என்ன நடக்குதுன்னு யாருக்குமே தெரியவில்லை என்று கஸ்தூரி கூற, அதற்கு கமல், அதான் சாக்சிக்கு கொஞ்சம் சொல்லிட்டிங்களே' என்று கமல் குறுக்கிடுகிறார். அதற்கு கஸ்தூரி, அருள் வாக்கு மட்டுமே சொல்லியிருப்பேன் என்று கூறிவிட்டு பின்னர் 'இங்குள்ள ஒவ்வொருத்தரும் தங்கமானவர்கள்' என்று கஸ்தூரி சர்டிபிகேட் கொடுத்தார். 
 
இதனையடுத்து பொதுமக்களில் ஒருவர் மதுமிதாவிடம் ஒரு கேள்வி கேட்கின்றார். ஆரம்பத்தில் போல்டாக இருந்த நீங்கள் போகப்போக நடிப்பது போல் தெரிகிறது' என்ற கேள்வியை கேட்டு மதுமிதா திடுக்கிடுகிறார். இந்த குற்றச்சாட்டை பலர் டுவிட்டரில் முன்வைத்த நிலையில் இதற்கு மதுமிதா என்ன பதில் கூறப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்