1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (16:20 IST)

தந்தை மரணத்திற்கு பின்னர் லாஸ்லியா வெளியிட்ட முதல் புகைப்படம்!

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.
 
பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் ஆரி நடிக்கும் இப்படத்தின் பிக்பாஸ் அபிராமி, மற்றும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், ஒரு புதிய படத்திலும் கமிட்டாகி இருந்தார். 
 
இதற்கிடையில் லாஸ்லியாவின் தந்தை திடீரென மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார். தந்தையின் திடீர் மரணத்தில் இருந்து மீண்டு வந்த லாஸ்லியா தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராமில் "நம்பிக்கை" என கேப்ஷன் கொடுத்து ப்ளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகளின் ஆறுதலில் ரிலாக்ஸ் ஆகியுள்ளார்.