புதிய Task' களுடன் இறுதி கட்டத்தை நெருங்கிய பிக்பாஸ்!
பிக்பாஸ் வீட்டில் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் ப்ரோஸெஸ் ஆரம்பமாகியுள்ளது. இதில் முதல் ஆளாக ஆரி ரியோவை நாமினேட் செய்தார். இரண்டாவது ப்ரோமோவில் ரியோ கேபியிடம் ஆரி தன்னை பயமுறுத்துவதாக பயந்துக்கொண்டே கூறினார்.
இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் புதிய டாஸ்க்களுடன் Ticket to finale வாரத்தை போட்டியாளர்கள் விறுவிறுப்புடன் துவங்கியுள்ளனர். இதில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா Game'மிலும் யார் வெற்றி பெற்று முதல் இடத்தை உள்ளாரோ அவர் நேரடியாக ஃ பைனலுக்கு செல்வார்.
ஃ பைனலுக்கு செல்லும் அதே நபர் டைட்டில் கார்ட் வெல்லவும் அதிகம் வாய்ப்பு உள்ளது. கடந்த சீசனில் Ticket to finale வென்ற முகின் ராவ் பின்னர் டைட்டில் கார்ட் வென்றது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் விறுவிறுப்புடன் ஸ்வாரஸ்யமாக செல்லும். பொறுத்திருந்து பார்ப்போம் யாருக்கு அந்த அதிர்ஷ்டம் என்று....